எகிப்திலுள்ள வாதைகள் - வெளிப்படுத்தின சுவிசேத்தில்
எகிப்திலுள்ள வாதைகள், வெளிப்படுத்தின சுவிசேத்தில் ஒரு படம் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவற்றை விளக்கமாக பார்ப்போம். ஆண்டவர் மனிதனை நேசித்து, அவனுக்கு எல்லாவற்றையும் 6 நாளில் கொடுத்து, 7ம் நாளில் ஒய்ந்திருந்தார். மகிழ்ச்சியாக இருந்தார். பின்பு, மனிதனை உண்டாக்கியதற்காக (ஆதி.6:3) மனஸ்தாப்பட்டார். பாவம் மனிதனுக்கும்,தேவனுக்கும் இடையில் பெரிய பிரிவினையை உண்டாக்கியது. பாவம் பொல்லாததாயிருந்தது. கர்த்தர்,சோதோம், கொமோரா பட்டணத்தை அழித்தார். நோவாவின் காலத்தில் வெள்ளத்தால் மனிதர்களை அழித்தார். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் மூலம் மனம் திரும்புங்கள், பரலோக இராஜ்ஜியம் சமீபமாக உள்ளது என்று எச்சரிப்பின் தூதைக் கொடுத்து எச்சரித்தார். ஆனால் மனிதன் கீழ்படியவில்லை. பின்பு, புதிய ஏற்பாடு காலத்தில், அப்போஸ்தலர்கள் மூலமாக நிருபங்களைக் கொடுத்து, கள்ளத்தீர்க்கதரிசிகள், அந்திக்கிறிஸ்து, பிசாசினால் உண்டாகும் தீமைகளைக் குறித்து எச்சரித்தார். பரிசுத்த ஆவியானவர் மூலமாக வல்லமையின் அபிசேஷகத்தை தந்தார். ஆனால் மனிதன் எதற்கும் கீழ்படியாமல், பார்வோனைப் போல இருதயத்தை கடினமாக்கிய பொழுது...