எகிப்திலுள்ள வாதைகள் - வெளிப்படுத்தின சுவிசேத்தில்


எகிப்திலுள்ள வாதைகள்,  வெளிப்படுத்தின சுவிசேத்தில் ஒரு படம் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவற்றை விளக்கமாக பார்ப்போம்.
ஆண்டவர் மனிதனை நேசித்து, அவனுக்கு எல்லாவற்றையும் 6 நாளில் கொடுத்து,  7ம் நாளில் ஒய்ந்திருந்தார். மகிழ்ச்சியாக இருந்தார். பின்பு, மனிதனை உண்டாக்கியதற்காக (ஆதி.6:3) மனஸ்தாப்பட்டார். பாவம் மனிதனுக்கும்,தேவனுக்கும் இடையில் பெரிய பிரிவினையை உண்டாக்கியது. பாவம் பொல்லாததாயிருந்தது. கர்த்தர்,சோதோம்,  கொமோரா பட்டணத்தை அழித்தார். நோவாவின் காலத்தில் வெள்ளத்தால் மனிதர்களை அழித்தார். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் மூலம் மனம் திரும்புங்கள், பரலோக இராஜ்ஜியம் சமீபமாக உள்ளது என்று எச்சரிப்பின் தூதைக் கொடுத்து எச்சரித்தார். ஆனால் மனிதன் கீழ்படியவில்லை. பின்பு,  புதிய ஏற்பாடு காலத்தில், அப்போஸ்தலர்கள் மூலமாக நிருபங்களைக் கொடுத்து, கள்ளத்தீர்க்கதரிசிகள், அந்திக்கிறிஸ்து,  பிசாசினால் உண்டாகும் தீமைகளைக் குறித்து எச்சரித்தார். பரிசுத்த ஆவியானவர் மூலமாக வல்லமையின் அபிசேஷகத்தை தந்தார். ஆனால் மனிதன் எதற்கும் கீழ்படியாமல், பார்வோனைப் போல இருதயத்தை கடினமாக்கிய பொழுது,  கர்த்தர் கடைசியில் நியாத்தீர்ப்பின் நாளிலே கோபாக்கினை அபிசேஷகத்தை ஊற்றுகிறார்.
தேவனுக்கு கீழ்படிந்தவர்களுக்கு, வல்லமையின் அபிசேஷகம், அக்னி அபிசேஷகம் மகிமையின் அபிசேஷகத்தைக் கொடுத்து,  தன் மனவாட்டியாகிய சபையை கிறிஸ்துவுக்கு ஒப்பாக மாற்றுகிறார். தேவனுடைய அற்புதமான அற்புதங்கள் உண்டு. 2 அப்பமும்,  5மீனும் கொண்டு 5000 பேரை போஷித்தார். பிறவிக் குருடரை பார்க்க வைத்தார். முடவரை நடக்க வைத்தார். சாத்தானை விரட்டினார். மரித்தோரை எழுப்பினார். ஆனால், எகிப்தில் செய்த வாதைகள் அனைத்தும் நியாத்தீர்ப்பின் அற்புதம்.  இவை அனைத்தும் யார் மேல் வந்தது? மிருகத்தின் முத்திரையை தரிக்காதே. அவனைத் தொழுது கொள்ளாதே, கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு இணங்காதே என்று சொல்லியும் சிலர் துணிந்து,  தேவனை சேவியாமல், அந்திக்கிறிஸ்துவை சேவித்த படியால் கோபாக்கினை கலசம் ஊற்றப்பட்டது.
இப்பொழுது எகிப்தின் வாதைகளை, வெளி. சுவிசேஷத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 *நதியின் தண்ணீர் இரத்தமாகமாறுதல்*
இந்த வாதையானது நைல் நதியை தெய்வமாக வணங்கும் எகிப்தியர்களுக்கு எதிராக உள்ளது. இதை  வெளி. சுவிசேஷத்தில் 2,3 வது கோபாக்கினை கலசம் ஊற்றப்படும் போது கடல் நீரும், நதியும் இரத்தமாக மாறுவதற்கு ஒப்பாக கூறப்படுகிறது.
கோபாக்கினை கலசத்தின் 2வது தூதன் கலசத்தில் உள்ளதை சழுத்திரத்தில் கொட்டினான். அது இரத்தமாக மாறியது. இன்றைக்கும், மனிதன் சமுத்திரத்தை கெடுத்துப் போடுகிறான். இன்று அணுகுண்டை பரிசோதிப்பவர்கள், சமுத்திரத்தில் துருவ தேசத்தில் பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். நீல நிறமான கடல் இரத்தமாக மாறி,  கடலிலுள்ள மீன்கள் மாண்டு போகின்றன.
3வது தூதன் ஆறுகளில் கோபாக்கினை கலசத்தை ஊற்றுகிறான். கர்த்தர் எவ்வளவோ நதியை தந்திருக்கிறார். ஆனால், மனிதன் அது புண்ணிய நதி என்று கூறி, விக்கிரகம் போல் மாற்றி விடுகிறான். அதனால், கர்த்தர் மனிதன் தண்ணீர் எங்கு எடுத்தாலும் இரத்தமாக மாறும்படி செய்து, மரணத்தை ஏற்ப்படுத்துகிறார்.
கர்த்தர் நீதியுள்ள நியாதிபதியாயிருந்து, நியாயம் விசாரிக்கிறார். இரத்த சாட்சிகளின் இரத்தம், பரிசுத்தவான்களின் இரத்தம், எல்லாவற்றுக்கும் மேலாக இயேசுவின் இரத்தம் கோபாக்கினை கலசமாக ஊற்றப்படுகிறது. கர்த்தர் இரத்தப்பலி வாங்குகிறார். கலா. 6:7ல், கூறியது போல மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுக்கிறான்.


 *தவளை* : இந்த வாதையானது எகிப்தியர் வணங்கும்   *Heqt* என்ற தேவதைக்கு எதிராக உள்ளது. இதன் தலை தவளை தலை போலிருக்கும். கர்த்தர் அது வெறும் தவளை தான் என்பதையும், தான் ஒருவரே கர்த்தர் என்பதையும் பார்வோனுக்கு வெளிப்படுத்துகிறார்.
இந்த வாதையைப் பற்றி வெளி. 16:12-15 முதல் உள்ள வசனங்களில் பார்க்கிறோம்.  6வது தூதன் கோபாக்கினை கலசத்திலுள்ளதை ஐபிராத்து நதியில் ஊற்றினான். நதி வற்றிப் போனது.
இது கடைசி காலத்தில் எருசலேமுக்கு நேராக உள்ள யுத்தத்தைக் சித்தகரிக்கிறது. கிழக்கிலிருந்து சில இராஜாக்கள் சீனா, ஜப்பான், மங்கோலியா தேசங்களிருந்து பெரிய சேனையை இஸ்ரவேலுக்கு நேராக எடுத்து வரும்.  கடைசி காலத்தில் *அர்மகெதோன்* என்ற இடத்தில் யுத்தம் வரும். அதற்கு ஆயத்தப்படுத்துவதற்காக, 1500 மைல் நீளமுள்ள ஐபிராத்து நதியை வற்றிப் போகப் பண்ணுகிறார். அப்பொழுது,  வலுசர்ப்பம், மிருகம்,  கள்ளத்தீர்க்கதரிசிகள் வாயிலிருந்து தவளைக்கு ஒப்பான ஆவிகள் வரும். அவைகள் அற்புதங்கள் செய்கிற பிசாசின் ஆவிகள். சாத்தான் பேசுகிற அந்நிய பாஷைகளை, தவளைகள் பேசுவதைப் போல கர்த்தருக்கு விரோதமாக பேசும். இந்த தவளையின் வேலைகள், பூமியெங்கும் சுற்றித் திரிந்து, அற்புதங்களைச் செய்து,    இராஜாக்களை யுத்தத்திற்கு நேராக கூட்டிச் சேர்க்கும். இந்த வாதையானது எகிப்திலுள்ள வாதையைப் போலில்லாவிட்டாலும், இது தவளையின் ஆவியாக இருக்கிறது. துன்மார்க்கருக்கு உள்ள நியாத்தீர்ப்பை இரண்டு சம்பவங்களும் தெளிவாக கூறுகின்றன. ஆகையால், கிருபையின் காலத்தில் வாழும் நமக்கு கர்த்தர், 'இதோ நான் திருடனைப் போல வருகிறேன் ' என்கிறார். எனவே, தன் மானம் காணப்படாதபடி தன் வஸ்திரங்களை காத்துக் கொள்கிறவன் பாக்கியவான்.


 *பேன்* - இந்த 3வது வாதையான பேன் 'ஹைக்' என்ற பூமிக்கடவுளுக்கு எதிராக உள்ளது. இது எகிப்தியர்கள் வணங்கும் தெய்வத்திற்கு அருவருப்பை தருவதாயுள்ளது.
 *வண்டுகள்* :  4வது வாதையானது வண்டுகள்,  எகிப்தியர்கள் வணங்கும் சூரிய கடவுளாகிய ராவுக்கு பரிசுத்தமானது. இந்த வண்டுகளால் அவர்கள் கடவுளை வணங்க முடியவில்லை. தேசம் சுத்தமில்லாமல் போனதால், இது அவர்களுக்கு சாபமாக வருகிறது.
 *கொள்ளை நோய்:*
இந்த 5வது வாதையானது,  'Hathor' என்ற தெய்வத்திற்கு எதிராக உள்ளது. எகிப்தியர்கள் காளைகளை புனிதமாக நினைத்து வழிபடுகிறார்கள்.
இந்த விக்கிரக வணக்கத்திலிருந்த, எகிப்திய மக்களுக்கு கர்த்தர் நியாத்தீர்ப்பைக் கொடுக்கிறார். இந்த பேன், வண்டுகள் காளையினால் வரும் கொள்ளை நோய் அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு அருவருப்பை கொண்டு வருகிறது. அவர்கள் வணங்கும் தெய்வங்களை கர்த்தர் இந்த நியாத்தீர்ப்பின் மூலம் செயலிழக்கச் செய்கிறார்.
இவற்றை வெளி. 6 : 7-8,  முதல் உள்ள வசனத்தில் பார்க்கிறோம்.  ஆட்டுக்குட்டியானவர் புத்தகத்திலுள்ள 4வது முத்திரையை உடைக்கும் போது,  'மங்கின குதிரை' வருகிறது. அதற்கு பட்டயம்,  பஞ்சம், *துஷ்டமிருகம்* , கொள்ளைநோய் போன்றவற்றை கொலை செய்யும் அதிகாரம் கொடுக்கப்படுகிறது. இங்கு *துஷ்டமிருகம்* என்று சொல்லப்படுவது    *பேன், வண்டுகள், காளைகளைக்* குறிக்கிறது. ( frogs, gnats, flies, locusts) .
எப்படி பார்வோனுக்கு *பேன், வண்டு, கொள்ளைநோய்* போன்ற வாதைகளைக் கொடுத்து, கர்த்தர் திருந்துவதற்கு தருணம் கொடுக்கிறாரோ அது போல *மங்கின குதிரை* மூலமாக தண்டனைகளைக் கொடுத்து மக்கள் திருந்துவதற்கு தண்டனை கொடுக்கிறார். இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால்,  இந்த. தண்டனைகளைக் கொடுத்து தான்,  பழைய ஏற்பாட்டில் மக்களை திருத்துவதற்கு கர்த்தர் நியாத்தீர்ப்பைக் கொடுக்கிறார். அதை லேவி. 26:21-26; உபா. 32: 23-24; 2 சாமு. 24:13; 1 நா. 21:12;  எசே. 14:12-21 உள்ள வசனங்களில் பார்க்கிறோம்.  இதையே தான் அப். யோவான் வெளி. விசேஷத்தில் அவிசுவாசிகளுக்கு, கர்த்தருக்கு கீழ்படியாதவர்களுக்கு எதிராக கர்த்தர் கொடுப்பதாகச் சொல்கிறார்.
இந்த மங்கின குதிரையில் வந்த வீரனுக்கு பூமியில் 1/4 பங்கில் உள்ளவர்களை கொலை செய்யும் அதிகாரம் கொடுக்கப்படுகிறது. இதில், வேண்டாம் என்று ஒதுக்குகிறவர்கள் தண்டனை அடையும் போது, தேவனை தேடுகிற பிள்ளைகள் தப்புவிக்கப்படுவார்கள். இந்த சூழ்நிலையிலும் கர்த்தர் தம் பிள்ளைகளை தப்புவிக்கிறார் என்பதை எசே. 14: 22,23ல், பார்க்கிறோம்.
இதை சரித்திர பூர்வமாகவும் பார்க்கிறோம்.  14ம் நூற்றாண்டில், ஐரோப்பா கண்டத்தில் கொள்ளை நோய் வந்து, 5 கோடி மக்கள் இறந்தனர். இதை 'கருப்பு மரணம்' என்கிறார்கள். இந்த தண்டனையைப் பார்த்து, அநேக மக்கள் வேதாகமத்திற்கு திரும்பினார்களாம்.  மரணம் (அ) பாதாளம் ஒரு மனிதனை பாதிக்கும் பொழுது,  பேதையாக உள்ளவர்கள் உண்மை எது என்று புரிந்து கொள்வார்கள். எனவே, இருண்டகாலத்தில் மனிதனுக்கு தண்டனை கொடுத்து, கர்த்தர் தண்டனைகள் மூலமாக பேசுகிறார். இது ஒரு இருண்ட காலத்தின் நற்செய்தி என்று கூறப்படுகிறது.


 *எரிபந்த கொப்பளங்கள்:* இந்த வாதையில் முதன்முதலாக,  மனிதனும் தாக்கப்படுகிறான். இது ஒரு அச்சுறுதல் தரும் வாதையாக உள்ளது. இது எரிச்சலும், வலியும், வீக்கமாக உள்ளதாகவும் இருந்தது. இந்த வாதை எகிப்திய கடவுள் 'Imhotep' என்ற தெய்வத்திற்கு எதிரானது. இது மருத்துவ கடவுள் என்று எகிப்தியர்களால் அழைக்கப்படுகிறது. யாரெல்லாம் எகிப்திய கடவுளுக்கு நெருக்கமாக உள்ளார்களோ, அவர்களை அதிகமாக தாக்குகிறது.
அதே போல வெளி. 16:1-2ல், முதல் கோபாக்கினை கலசம் ஊற்றப்படும் பொழுது,   யாரெல்லாம் மிருகத்தின் முத்திரையை தரித்துள்ளார்களோ (அ)  அந்திக்கிறிஸ்துவை வணங்குகிறார்களோ அவர்களது வாயில் கொடியபுண் உண்டாகிறது. பொய் நாவு கர்த்தருக்கு அருவருப்பானது. அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில், அவற்றை வணங்குபவர்கள் வாயில் எல்லாம் புண். ஆனால், கர்த்தருடைய பிள்ளைகள் இரட்சிக்கப்படுகிறார்கள். அதே போல எகிப்திலும்,  இஸ்ரவேல்  மக்கள் இரட்சிக்கப்படுகிறார்கள்.


 *கல்மழை* :  இந்த வாதை அச்சுறுத்தல் மட்டுல்லாது, இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கொடூரமாக உள்ளது. இந்த வாதையானது எல்லா எகிப்திய கடவுளுக்கு எதிராகவும், முக்கியமாக 'Nut' என்ற வானத்துக் கடவுளுக்கு எதிராகவும் உள்ளது.
எப்படி,  கர்த்தர் பார்வோனுக்கு 'கல்மழை' வாதையை கொடுத்து எச்சரித்தாரோ, அதே போல வெளி. 8:7ல், கர்த்தர்,  2வதுஉபத்திரவ காலத்தில்,  கர்த்தருக்கு கீழ்படியாத மக்களுக்கு, மிருகத்தின் முத்திரையைத் தரித்த மக்கள் மனம் திரும்புவதற்கு, முதலாவது தூதன் எக்காளம் ஊதும்போது, ரத்தம் கலந்த அக்னியும் கல்மழையும் உண்டாக்குகிறார். அதில், 1/3 பங்கு மரங்கள் வெந்து போயிற்று என்று பார்க்கிறோம். ஆனால், மக்கள் மனம் திரும்பவில்லை. பார்வோனின் இருதயம் எப்படி கடினப்பட்டதோ, அதே போல, அவர்கள் மனமும் இறுகிப் போனது.
பின்பு, கர்த்தரின் கோபம் அதிகமாகி, வெளி. 16:17-21ல், 7வது தூதன், கோபாக்கினை கலசத்தை ஆகாயத்தின் மீது ஊற்றினான். அப்பொழுது,  பரலோகத்தின் சிங்காசனத்திலிருந்து ஆயிற்று(முடிந்தது) என்ற பெரும் சத்தம் வந்தது. இது இயேசு கிறிஸ்து  சிலுவையில் மரித்தபோது,  எல்லாவற்றையும் நிறைவேற்றின பின்பு, 6ம் வார்த்தையில் முடிந்தது என்றதற்கு ஒப்பாக உள்ளது. பின்பு, பூமியில் பெரும் அதிர்ச்சி உண்டாயிற்று. இப்படிப்பட்ட அதிர்ச்சி மனிதன் உண்டான நாளிருந்து,  இதற்கு முன்பு  உண்டாகவில்லை என்று கூறப்படுகிறது. அப்பொழுது,  மகாநகரமாகிய எருசலேம் 3 பகுதியாக உடைந்து பிரிந்தது. (இன்றைக்கும் எருசலேமில், அராப் கார்னர், யூதர்களுடைய கார்னர்,  Gentiles corner என்று மூன்று பகுதிகள் இருக்கின்றன.) இடிமுழக்கமே பிரித்துக் கொடுக்கிறது. அதற்கு பின்பு,  சமுத்திரத்தின் தீவுகள் அகன்று போயின. பாபிலோன் பட்டணம் விழுந்தது. தீவுகள் யாவும் அகன்று போயின. ஒரு தாலந்து நிறையான கல்மழை விழுந்தது. ஒரு தாலந்து கல்மழையின் எடை 50கி  என்கிறது வேதம். அதனிமித்தம் மனுஷர்கள் கர்த்தரை தூஷித்தார்களே ஒழிய மனம் திரும்பவில்லை.


 *வெட்டுக்கிளி* பார்வோனைத் திருத்த கர்த்தர் ஒன்றன்பின் ஒன்றாக வாதைகளை அனுப்புகிறார். ஆனாலும்,  அவன் மனது கடினப்பட்டுக் கொண்டே போகிறது. 7 வாதைகளைக் கொடுத்த பின்பும் அவன் திருந்தாததால், 8 வது ஒரு வாதையைக் கொடுக்கிறார். அது மிகவும் அகோரமாக உள்ளது. அது தான் வெட்டுக்கிளியினால் வந்த உபத்திரவம்.  இந்த வாதையினது, எகிப்தியர்கள் வணங்கும் 'Set' என்ற எகிப்திய கடவுளுக்கு எதிரான நியாத்தீர்ப்பாக உள்ளது. இந்த கடவுள் பயிர்களைப் பாதுகாக்கும் கடவுள் என்று எகிப்தியர்களால் நம்பப்படுகிறது. ('The Protector of Crops').
வேதாகமத்தில், கர்த்தர் மக்களுக்கு நியாத்தீர்ப்பு கொடுக்கும் 'agent' ஆக இந்த வெட்டுக்கிளிகளைப் பயன்படுத்துகிறார். இதை யாத். 10:1-4; உபா. 28:38; 1 ராஜ. 8:37;  2 நாள 7:13; யோவேல் 1:1-4; ஆமோஸ் 4:9 ல் பார்க்கிறோம்.  எல்லாவற்றுக்கும் மேலாக நியாத்தீர்ப்பின் நாளிலே, பெரிய சேனையானது,  இந்த வெட்டுக்கிளிகள் ரூபத்தில் வந்து, இந்த தேசத்திலுள்ள பாவத்திலுள்ள மக்களை அழிக்க வருகிறது என்பதை வெளி. 9:6-12ல்,  கூறப்பட்ட 5வது எக்காளம் நினைவூட்டுகிறது.
5வது எக்காளம் ஊதும் போது,  வானத்திலிருந்து வந்த தேவதூதன், பாதளத்தின் திறவுகோலைத் திறந்தான். புகை எழும்பி, சூரியனும், சந்திரனும் அந்தகாரப்பட்டது. வெட்டுக்கிளிகள் வந்தது. இது கொலை வெறி பிடித்த பிசாசின் ஆவியே. இதற்கு தேளின் வல்லமைக்கு ஒப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.  இந்த வாதையின் நியாத்தீர்ப்பு மனிதன் மேல் வந்தது.  நெற்றிகளில் தேவனுடைய முத்திரை தரித்திராத மனிதனை சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. அவைகள் முத்திரை தரித்திராத மனிதனைக் கொல்லாமல், 5மாத கால அளவும், வேதனைப் படுத்தும்படி உத்தரவு கொடுக்கப்பட்டது. வெட்டுக்கிளிகள் செய்யும் வேதனை தேளைக் கொட்டுவது போலிருந்தது. மனிதன் சாக நினைப்பான். ஆனால் சாகமுடியாது. (பூமியிலும் நகரத்திலுமுள்ளவர்கள்)
அதன் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட. குதிரைக்கு ஒப்பாக இருந்தது. தலையில் வெண்மயமான கீரிடமும், அதன் முகம் மனுஷன் முகமும் போலிருந்தது. கூந்தல் ஸ்திரியின் கூந்தலைப் போலிருந்தது. அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்களைப் போன்றிருந்தது. இரும்புக் கவசம் போட்ட மார்பகம்,  சிறகுகளின் இரைச்சல்,  யுத்தத்திற்கு ஓடுகிற அநேக குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தது. அதன் வால்கள் தேள்களின் வால்களிலுள்ள கொடுக்குகளைப் போன்று இருந்தது.  ஆக மொத்தம்  எல்லாவற்றையும் உருவகப்படுத்திப் பார்த்தால், அது ஒரு இயந்திர மனிதனான ரோபோட்டுக்கு ஒத்து இருந்தது.  சித்தரவதை செய்வதற்கென்றே பாதளத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. வெட்டுக்கிளிகளில் ராஜா இல்லையென்று, நீதி. 30:27ல், கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த குறிப்பிட்ட வெட்டுக்கிளிக்கு ராஜா உண்டு. அதன் பெயர் எபிரேய பாஷையில் 'அபெத்தோன்'(வேதனை என்று அர்த்தம்) என்றும், கிரேக்க பாஷையில் 'அப்பொல்லியோன்' (சித்தரவதை என்று அர்த்தம்)  என்றும் கூறப்படுகிறது. இரண்டுமே சாத்தான்,  உயிரோடு வதைக்கிறவன் என்று பொருள்.
இந்த வெட்டுக்கிளிகள், அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் ஆயுதமேந்திய படைகளாக,  ஹெலிகாப்டரில் உபயோகப்படுத்தப் படுகின்றன. தங்களைத் தாங்களே மனிதனாக உருவாக்கி, ரோபோட்டுகளாக செயல்படப் போகின்றன என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் பல தேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெலிகாப்டருக்குப் பெயர் 'வெட்டுக்கிளி' என்று கூறுகிறார்கள். அவற்றிலிருந்து குண்டு போடப்படும் பொழுது,  அதிலிருந்து 1000 குண்டு வருமென்றும், அது பாய்சன் நிறைந்தது என்றும், அது மனிதனைக் கொல்லாது சித்தரவதை செய்யுமென்றும் கூறப்படுகிறது. அதிலிருந்து வரும் குண்டூசிகள் 2" அங்குலம், 3" அங்குல நீளமுள்ளதாம்.
பழைய ஏற்பாட்டிலே, யோவேல் தீர்க்கதரிசி, யூத மக்களுக்கு ஒரு எச்சரிப்பின் தூததைக் கொடுக்கிறார். அங்கு இதே போல வெட்டுக்கிளிகள் வந்து , அந்த தேசத்தை அழித்த போது, அவர் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மனம் திரும்புங்கள் என்கிறார்.  யோவேல் 1:13-14. 'இரட்டுத்தி புலம்புங்கள். பரிசுத்த ஓய்வு நாளை நியமியுங்கள் ........மூப்பரையும் தேசத்தின் குடிகளையும் , உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தில் கூடிவரச் செய்து, கர்த்தரை நோக்கி புலம்புங்கள்.கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது. இருளும் அந்தகாரமுமான நாள். மப்பும் மந்தராமுமான நாள்.(2:21) எல்லா மக்களும் நியாத்தீர்ப்பை பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறார். ஆகையால்,  நாம் கர்த்தரை நம்பி விசுவாசித்து நம் பாவங்களை அறிக்கையிட்டால், நியாத்தீர்ப்பின் நாளிலே நாம் பயப்படத் தேவையில்லை.


 *காரிருள்* : கர்த்தர் எந்த எச்சரிப்பும் தராமல் இந்த வாதையை அனுப்புகிறார். அது சாதாரண இருளல்ல. இயற்கைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.(Supernatural elements) .கர்த்தர் செயற்கையாக உள்ள விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றிலிருந்து வரும் வெளிச்சமும் அற்றுப்போகப் பண்ணுகிறார்.
இந்த வாதையானது, எகிப்தியர்கள் முக்கியமாக வணங்கும் சூரிய கடவுளுக்கு எதிராக உள்ளது. ஆனால், இஸ்ரவேல் ஜனங்கள் இருக்குமிடத்தில் வெளிச்சம் இருந்தது. தேவனின் தனிப்பட்ட மகிமை அங்கு பிரகாசித்தது. பார்வோன் பாவத்திலிருந்து வெளியே வராததால், எப்படி காரிருள் வந்ததோ, அதுபோல உலகத்தின் கடைசிகாலங்களில் நியாத்தீர்ப்பின் நாளிலேயும் நடக்கும் என்று, வெளி.16:9-10 ல், கூறப்பட்டுள்ளது.
அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியிலே,   கர்த்தர் தேவதூதர்களை அனுப்பி, அந்திக்கிறிஸ்துவின் முத்திரையை தரிக்காதே என்று எச்சரித்த பின்பும், மக்கள் துணிந்து அந்திக்கிறிஸ்துவை சேவித்தபடியால், நியாத்தீர்ப்பு 5ம் தூதன் மூலமாக வந்தது என்று பார்க்கிறோம்.  அவன் கோபாக்கினை கலசத்தை 3 வது முறையாக ஊற்றும் போது, இருள் வந்தது. இருளின் வல்லமையினாலே, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த போது, எவ்வாறு 3 1/2 மணி நேரம் காரிருள் வந்ததோ, அதுபோல அந்திக்கிறிஸ்துவின் ராஜ்ஜியமும் இருளடைந்தது என்று பார்க்கிறோம்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே அடிமைகளாக இருந்து அங்கிருந்து புறப்பட்டு கானானுக்கு போவதற்கு முன்பாக 10 வாதைகள் எகிப்திலே, எகிப்தியர்கள் மீது ஊற்றப்பட்டது. அதே போல இந்த உலகத்திலிருந்து, பரம(பரலோக) கானானுக்கு போவதற்கு முன்பாக,  இந்த உலகத்தில் இருக்கும் போது, 7 வாதைகள் ஊற்றப்படும். ஆனால், ஆண்டவருடைய ஜனங்கள் மீது அல்ல, துன்மார்க்கர் மீது ஊற்றப்படும். ஆண்டவருக்கு எதிர்த்து நின்றவர்கள் மீது ஊற்றப்படும். ஆண்டவருடைய பிரமானங்களை, ஆண்டவருக்கு எதிர்த்து நின்றதால் உண்டான விளைவுகள் தான் இந்த 2 இடத்து வாதைகளும். இஸ்ரவேல் ஜனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதுபோல, கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

இப்போது,  கிருபையின் காலத்தில் இருக்கிறோம். பின்பு வரப்போகும் 7 வருடங்களும் அந்திக்கிறிஸ்துவின் காலம். பிதாவிற்கு நேர் கீழாக இடைபடும். அப்பொழுது,  7 முத்திரைகள், 7 எக்காளம், 7 கோபாக்கினை கலசங்கள் ஊற்றப்படும். அப்பொழுது,  பரலோகத்திலுள்ள தேவாலயம் அடைக்கப்படும். யாராலும் உள்ளே செல்ல முடியாது.  அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் எடுத்துக் கொள்ளப்படுவார். கர்த்தர் பூமியில் அநேக கிருபையின் தருணங்களைத் தந்தார். பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் மூலமாக எச்சரித்தார். புதிய ஏற்பாட்டில்,  நிருபங்களைக் கொடுத்து, அப்போஸ்தலர்கள் மூலமாக கர்த்தர் எச்சரிக்கிறார். 1 தெச. 5:2ல், 'இரவிலே திருடன் வருகிற விதமாய் கர்த்தருடைய நாள் வருமென்று கூறப்படுகிறது.' இதுவே இரட்சண்ய நாள். நமக்கு பரிசுத்த ஆவியானவர் மூலமாக,  கிருபையின் காலத்திலே முத்திரை தரித்து விட்டார். அதனால்,  பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாதீர்கள் என்று எபே. 1:13, 4:30ல், கூறப்பட்டுள்ளது. இன்று பரிசுத்த ஆவியைப் பெறும் பொழுது,  கர்த்தருடைய முத்திரை நம் நெற்றியில் தரிக்கப்படுகிறது. பூமியிலிருக்கும் போதே, நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெறும் பொழுது,  தேவனுடைய முத்திரை தரிக்கப்படுவதால், இமைப்பொழுதில் நாம் எடுத்துக் கொள்ளப்படுவோம். ஆகையால்,  மனம் திரும்ப வேண்டும்.
ஒரு பக்தன் கூறும் பொழுது, 'காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே' என்கிறார். கிருபையின் காலம் தரப்படுகிறது. கர்த்தர், ஊழியக்காரர் மூலமாக பேசுகிறார். சுவிசேஷத்தை புறக்கணித்து, வேத வாக்கியத்தை புறக்கணித்து, மனம் போல் வாழ்ந்து,  இருதயத்தை கடினமாக்குகிற வர்களுக்கு (கிறிஸ்தவர்களுக்கு) அய்யோ என்று கூறப்படுகிறது.
ஆகையால், காலத்திற்கு தப்பி, ஏசா. 55:6, 7ல் கூறியபடி,'கர்த்தரை கண்டு அடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கி கூப்பிடுங்கள். அவர் மன்னிக்கிறதற்கு தயையுள்ளவராயிருக்கிறார். கடைசிமூச்சு வரை தேவ கிருபை உள்ளது. ஆனால், கிருபையின் காலம் முடிந்தபின்பு, கர்த்தர் தயவு காட்ட மாட்டார்.
தேவனுடைய பிள்ளைகள் இறக்கும் பொழுது சந்தோஷமாக இருக்கும் ஆகையால்,  நாம் பாவத்திற்கு தப்பி, பரலோக கானானை அடைய முயற்சி செய்வோம். கர்த்தரை அறியாத மக்களையும், கிறிஸ்துவண்டை அழைத்துச் செல்ல, பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடுவோம். எப்பொழுதும் பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருக்க வேத வசனங்களை வாசித்து, கர்த்தரை அறிகிற அறிவில் மேலும் மேலும் வளர்வோம்.


 *தலைப்பிள்ளை சங்காரம் :* இந்த வாதையானது, எகிப்திலுள்ள இரண்டு குறிப்பிடத்தக்க தெய்வங்களுக்கு எதிராக வருகிறது. முதலில் ' Osiris ' என்ற எகிப்திய கடவுளுக்கும், பின்பு பார்வோனுக்கு எதிராகவும் (பார்வோன் தன்னை கடவுள் என்று சொல்லிக் கொள்வதால்) வருகிறது. 1) இந்த ' ஓசரிஸ்' கடவுள் எகிப்தியருக்கு ' வாழ்க்கையைத் தருபவர்' என்று நம்பப்படுகிறது.(' The Giver of Life '). 2) பார்வோனை தெய்வமாக வணங்கும் எகிப்தியருக்கு எதிராக வருகிறது.  அதனால் தான் பார்வோனுக்கு அடுத்த கடவுளாக கருதப்படும் பார்வோனின் முதல் மகனை கர்த்தர் எடுக்கிறார். அவர்கள் தெய்வங்களுக்கு மேலானவர் கர்த்தர் என்பதை விளங்கப் பண்ணுகிறார். பார்வோனை அவர்கள் வணங்கும் ' Thutmose IV' என்ற கடவுளாக சொல்கிறார்கள். அதனால் தான் இந்த *தலைப்பிள்ளை சங்காரம்* . எகிப்தியர்கள் முதல்குழந்தையை கடவுளாக நினைப்பதால், அவனைக் கொல்ல சம்மதிக்காததால், கர்த்தர் எடுக்கிறார். அவன் கடவுளில்லை என்பதை நிருபிக்கிறார்.
இதைப்போல, கர்த்தர் நியாத்தீர்ப்பின் நாளிலே, *அந்திக்கிறிஸ்துவை தெய்வமாக வணங்கும்* *சேனைகளை* கடைசி காலத்திலே இயேசு கிறிஸ்து அழிவுக்கு கொண்டு வந்து, உலகத்தை அழித்து முடிவுக்கு கொண்டு வருவார் என்று வெளி. 19:19-21ல், கூறப்பட்டுள்ளது. ' முத்திரையைத் தரித்தவர்களையும், அதின் சொரூபத்தை வணங்கியவர்களையும், மோசம்போக்கின கள்ளதீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான். இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்'  என்று கூறப்பட்டுள்ளது.  எகிப்திலுள்ள வாதைகள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டு,  அப். யோவான் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

THE QUEEN OF PERSIA - ESTHER

The tale of the Moabite women Ruth

Berakhah (or berachah)

Shalom

AYIN (Eye)

Charis

Friendship

Shekinah Glory